கத்தார் செல்லும் விமானத்தில் கோளாறு; கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து
சென்னையில் இருந்து, மேற்காசிய நாடான கத்தாரின் தலைநகர் தோகா செல்லும், 'கத்தார் ஏர்லைன்ஸ்' விமானம், இன்று (அக்டோபர் 29)அதிகாலை 4:15 மணிக்கு புறப்பட தயாரானது. இதில், 212 பயணியர், 12 விமான ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் ஓடு பாதையில் ஓடுவதற்கு தயாரானபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. உடனடியாக, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. பயணியர் ஓய்வறை பகுதியில் தங்கவைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யும் பணியில் இறங்கினர்; நீண்ட நேரமாகியும் சரி செய்ய முடியவில்லை.
இதனால், விமானம் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின் பயணியர் அனைவரும், சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் பழுது நீக்கப்பட்டப்பின், நாளை (அக்டோபர் 30) தோகா புறப்படட்டு செல்லும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே வேலையா போச்சு. வானில் பறக்கும் பல விமானங்கள் விமானங்கள் அல்ல, அவைகள் பறக்கும் பிணப்பெட்டிகள். வருந்துகிறேன் இப்படி கூறுவதற்கு.மேலும்
-
பாலியல் வழக்கில் சிக்கிய எஸ்.பி.,க்கு முன் ஜாமின்
-
கலை, அறிவியல் படிப்புகளுக்கு விருப்ப தேர்வு பட்டியல் வெளியீடு
-
வீடு விற்பதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி
-
பண்ருட்டியில் பச்சிளம் ஆண் குழந்தையை விற்ற தாய் உட்பட 4 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது
-
நவ., 1ல் மணல் லாரிகள் வேலை நிறுத்தம்
-
பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்