'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்
-நமது நிருபர்-
சற்று நேரத்தில், 'டேக் ஆப்' ஆக வேண்டிய அந்த, 'ஸ்பைஸ்ஜெட்' விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், ஜன்னலில் டேப் ஒட்டியிருப்பதையும், அது தளர்ந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். விமான ஊழியரிடம் கேள்வியும் எழுப்பினார்.
அவர்களுக்கு இடையே நடந்த காரசார வாக்குவாதத்தின் வீடியோ வைரலாகியுள்ளது. 'அதனால் எந்தப் பாதுகாப்புப் பிரச்னையும் இல்லை' என, கூறிய விமான ஊழியர், 'இந்த விமானத்தில் பயணிப்பது சிரமம் என்றால், நீங்கள் பயணத்தை தவிர்த்து விடலாம்' என, துடுக்காக பேசினார்.
அவரது பேச்சு பயணியருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 'எங்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்' என்ற பயணியின் கேள்விக்கு, தானே பொறுப்பேற்பதாகவும் அந்த ஊழியர் பதிலளித்தார்.
இந்த வாக்குவாதத்தின் வீடியோவை கண்ட வலைதளவாசிகள், ஸ்பைஸ்ஜெட் பற்றிய தங்கள் அனுபவத்தை பதிவிட்டு வருகின்றனர். கேள்வி எழுப்பிய பயணிகளுக்கு முறையான விளக்கம் தராமல், விமான ஊழியர்கள் அலட்சியமாகப் பதிலளித்த விதம் தற்போது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.
வீடியோவில், விமானம் புறப்பட்ட அல்லது செல்லவிருந்த குறிப்பிட்ட ஊர் விவரங்களை பயணிகள் குறிப்பிடவில்லை. இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
ஒரு இந்திய வம்சாவளி விமானி 174 உயிர்களை ஒரு பயங்கரவாதியின் தாக்குதலில் இருந்து தன் உயிரையும் பாராமல் காப்பாற்றுகிறார். இங்கே.... அலட்சியத்தை சுட்டிக்காட்டிய பிறகும், தெனாவட்டாக நடந்துகொள்கின்றனர் விமான ஊழியர்கள். இவர்களை உடனே பணியிலிருந்து நீக்கவேண்டும்.மேலும்
-
பிரைம் எஸ்.டி.சீயோன் பள்ளியில் கருப்பு, வெள்ளை நிற தினம்
-
கத்தியால் வெட்டிய வாலிபர் கைது 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு வலை
-
நூற்றாண்டு பழமை வாய்ந்த உத்தமபாளையம் கிளைச் சிறை மூடல்: கைதிகள் பெரியகுளத்திற்கு மாற்றம்
-
கட்டுமான பொருட்கள் விலை நிலவரம்
-
அரசு பணிகளில் நேரடி நியமனம்: வயது வரம்பில் தளர்வு
-
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு