விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.பூவனுார் கிராம விவசாயிகளுக்கு வேளாண் கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் 11 பேர், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.

அவர்கள், கோ.பூவனுார் கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாணவிகள் ரித்திகா, சஹானா, ஷாஜிதா, ஷாலினி, சந்தியா, சிந்துஜா, சவுமியா, ஸ்ரீதுர்கா, ஸ்ரீபிரியா, சுபிதா ஆகியோர் பயிர் சாகுபடி முறைகள், நெல் ரகங்கள், நோய் தாக்குதல் குறித்து தெரிந்து கொண்டனர். மேலும், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement