கத்தியால் வெட்டிய வாலிபர் கைது 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு வலை
புதுச்சத்திரம்: வாலிபரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். இரு பெண்கள் உட்பட 6 பேரை தேடிவருகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் முகிலன்,22; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் மணிவண்ணனுக்கும் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் இவர்களுக்குள் நேற்று (அக்.,29) மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிவண்ணன், ஆதரவாளர்கள் புவியரசன், குருநாதன், செல்வம் ஆகியோர் சேர்ந்து முகிலனை கத்தியால் வெட்டினர். தடுக்க வந்த முகிலனின் உறவினர்கள் மணிகண்டன், பவித்ரா, கலையரசி ஆகியோரை தாக்கி, வீட்டிலில் நின்றிருந்த காரையும் உடைத்து சேதப்படுத்தினர்.
படுகாயமடைந்த முகிலன், மணிகண்டன், பவித்ரா, கலையரசி நால்வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த முகிலனின் அண்ணன் முரளிதரன், தாய் வள்ளி, முகிலனின் பாட்டி அஞ்சலை ஆகியோர் சேர்ந்து, புவியரசனின் தாய் வைரத்தை தாக்கி, கத்தியால் வெட்டினர்.
படுகாயமடைந்த வைரம், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இருதரப்பினரும், தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, தட்சணாமூர்த்தி மகன் செல்வம், 32; கைது செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தல்? அறிக்கை அளிக்க உத்தரவு
-
450 டன் வெங்காயம் எங்கே? அதிகாரிகள் பதிலால் குழப்பம்
-
த.வெ.க., கூட்டணியில்சேர பா.ம.க., தயாராக உள்ளது: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்
-
கோவை சிறை வாசலில் தப்பிய விசாரணை கைதி ராகவன் மீண்டும் கைது
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்; ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தனியார் வசமாகிறதா 'டாஸ்மாக்': பரிசீலனை செய்கிறோம் என்கிறார் அமைச்சர்