மகளிர் திட்ட முன்னேற்றம் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், வங்கிக்கடன் இணைப்புகள் அதிகரிப்பது, மகளிர் சுயஉதவிக்குழுக்களை வலுப்படுத்துவது, காமராஜர் காலை உணவுத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் மகளிர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பினை ஊக்குவித்து, தொழில் முனைவோர் திறனை வளர்த்து நிலையான வருமானத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கியாளர்களுடன் அவ்வப்போது கூட்டத்தை நடத்தி கடன் விண்ணப்பங்களின் நிலை, கடன் வழங்குவது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு தகுதியான குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அப்போது, மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement