கஞ்சா விற்ற வாலிபர் கைது

புதுச்சேரி: ஐயங்குட்டிபாளையத்தில் கஞ்சா பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேறறு முன்தினம் மாலை 4:40 மணியளவில் ஐயங்குட்டிப்பாளையம் கல்மேடுபேட் சந்திப்பு பகுதியில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசாரை பார்த்ததும் வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து, சோதனை செய்தனர்.

அவர், 200 கிராம் கஞ்சா பதுக்கி வைத்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஐயங்குட்டிப்பாளையம் ரவிச்சந்திரன் மகன் விக்னேஷ்,21, என்பதும், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர், மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement