மாவட்டத்தில் விவசாயிகள் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்ய அறிவுரை
விழுப்புரம்: மாவட்டத்தில் விவசாயிகள் தங்களின் அடையாள எண்ணை பயன்படுத்தி சம்பா நெல் 2 பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு :
விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் கீழ் சம்பா (சிறப்பு) பருவநெல் 2 பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மகசூல் இழப்பை ஈடுசெய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கவும் மாவட்டத்தில் இந்தாண்டு சாகுபடி செய்யும் சம்பா (சிறப்பு) பருவநெல் 2 பயிருக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சம்பா சிறப்பு பருவத்திற்கு, 13 வட்டாரங்களில் உள்ள, 794 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பா சிறப்பு பருவத்தில் நெல் 2 நடவு செய்துள்ள ஏக்கருக்கு ரூ.573 செலுத்தி வரும் நவ., 16ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தாண்டு ‘எல்நினோ’ காலநிலையால் மழை பொழிவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சில சமயங்களில் குறைவான மழை மற்றும் அதிக வெப்பத்தால் நிலத்தடி நீர் குறையவும், சில சமயங்களில் அதிக மழைப்பொழிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த சம்பா பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீட்டு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
இந்தாண்டு 1436 பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் ஆகியவற்றோடு பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விபரங்களோடு விவசாய அடையாள எண் பதிவு செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இது பற்றிய மேலும் விபரங்கள் பெற அருகேவுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
இந்தாண்டு சம்பா சிறப்பு பருவ நெல் 2 பயிரிட்டுள்ள விவசாயிகள் இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இருந்து மகசூல் இழப்பை ஈடுசெய்ய உரிய காலத்திற்குள் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
தீபாவளிக்கு புது வரவு பட்டாசு என்னென்ன; அனைவரையும் குஷிப்படுத்த தயாரானது சிவகாசி!
-
நாடு முழுவதும் இன்று 9.34 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,680 கோடி நிதியுதவி விடுவிக்கிறார் பிரதமர் மோடி
-
அர்னாப் புயல் ஆந்திராவை தாக்கியது எப்படி? படத்தை வெளியிட்டது நாசா
-
பல்லாங்குழி சாலையால் பொது மக்கள் பாதிப்பு
-
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி
-
ஆந்திரா பொன்னி விதை நெல் விற்பனை மும்முரம்