பல்லாங்குழி சாலையால் பொது மக்கள் பாதிப்பு

குளித்தலை:குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., ஆதிநத்தம் முதல் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை செல்லும் நெடுஞ்சாலையில், கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.

இந்த நெடுஞ்சாலை பல்வேறு கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலையாக இருந்து வருகிறது. மேலும் திருச்சி, குளித்தலை பகுதியில் இருந்து கிராமங்களுக்கு அரசு பஸ்கள் செல்கின்றன. இந்த சாலையில் கடந்த, ஆறு ஆண்டுகளாக மோசமான நிலையில் காணப்படுகிறது. இச்சாலை திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இருப்பதால், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக தெரிகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த சாலையை உடனே செப்பனிட வேண்டும் என, கருர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜசேகர், கருர் மற்றும் திருச்சி கலெக்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement