அர்னாப் புயல் ஆந்திராவை தாக்கியது எப்படி? படத்தை வெளியிட்டது நாசா

வாஷிங்டன்: வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், அக்.,28ம் தேதி ஆந்திராவின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்தது. இந்த அதி தீவிர புயலின் தாக்கம், ஆந்திரா, புதுச்சேரி, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களிலும் எதிரொலித்தது. பெரிய அளவிலான சேதம் ஆந்திராவுக்கே ஏற்பட்டது.

இந்த புயல் பாதிப்பால் 7 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 4,600 கோடிக்கு உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அர்னாப் புயல் கரையைக் கடக்கும் போது, இரவு நேரத்தில் செயற்கைக்கோள் எடுத்த படங்களை அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'இந்திய கடலில் ஏற்பட்ட அர்னாப் பெயரிடப்பட்ட புயல், அக்.,28ம் தேதி கரையைக் கடந்தது. அப்போது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எல் நினோ காலத்தில் உருவாகும் புயல்கள் குறைந்த தீவிரத்துடன் காணப்படும்,' இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Advertisement