நிறுவன கணக்கில் ரூ.80 கோடி மோசடி சென்னை நபரிடம் போலீசார் விசாரணை
வடபழனி: நிறுவன கணக்கில் இருந்து, 80 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவான வழக்கில், சென்னை நபரிடம், கேரளா போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள பி.எல்.எம்., நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நவீன் 33. இவரது நிறுவன அடையாளத்தைப் பயன்படுத்தி, நிறுவன கணக்கில் இருந்து பல்வேறு கணக்குகளுக்கு, 80 கோடி ரூபாய் சட்டவிரோதமாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் இழப்பு ஏற்பட்டதாகவும், அந்நிறுவனத்தின் உறுப்பினரான பிரேம்குமார், 58, என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இது குறித்து, கேரளாவின் நடக்காவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு கேரள குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளர் பென்னி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருகம்பாக்கம், சஞ்சய் காந்தி நகரில் வசிக்கும் பிரேம்குமாரை கைது செய்ய, கேரள குற்றப்பிரிவு போலீசார், நேற்று காலை 6:00 மணிக்கு வந்தனர்.
அப்போது, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக பிரேம்குமார் கூறியதையடுத்து, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின், அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026