கூடுதல் விலைக்கு உரம் விற்பனைபரமக்குடியில் 6 கடைக்கு நோட்டீஸ்
ராமநாதபுரம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள உர விற்பனை நிலையங்களில், மானிய உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் வேளாண்மை உரம், தரக்கட்டுபாடு உதவி இயக்குநர் நாகராஜன் குழுவினர் பரமக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் ஆய்வு செய்தனர். ஆறு சில்லரை உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு அந்நிறுவனங்களின் உர உரிமத்தை தற்காலிகமாக முடக்கம் செய்ய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் மானிய உரங்களை விற்க வேண்டும். தொடர்ந்து அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர்(பொ) வாசுகி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.200 மளிகை விற்பனை துவக்கம்
-
மளிகை தொகுப்பு திட்டம் துவக்கி வைத்தார் அமைச்சர்
-
சில வரி செய்திகள்: திருப்பூர்
-
நான் சொல்வது எல்லாம் உண்மை ஆகிறது; தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ராகுல்
-
குழந்தைகள் கடத்தலை கண்டுபிடிக்க செயற்கைக்கோள் உதவி செய்யுமா? இஸ்ரோ தலைவர் நாராயணன் கொடுத்த பதில்
-
திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 01/11/2026
Advertisement
Advertisement