மக்களை திரட்டி போராட்டம் விக்னேஷ் கண்ணன் எச்சரிக்கை
புதுச்சேரி: ‘அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் போராட்டம் நடத்துவேன்’ என, விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., கூறினார்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த இளைஞரை பார்ப்பதற்காக, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வான விக்னேஷ் கண்ணன் சென்றார். அப்போது, ஆண்கள் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே கழிப்பறை வாசலில், வயதான நோயாளிகள் உரிய படுக்கை வசதியின்றி தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான படுக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என பணியில் இருந்த டாக்டர்களிடம் வலியுறுத்தினார்.
பின், அவர் கூறியதாவது:
நோயை தீர்க்க தான் மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால், மருத்துவமனைக்கு வந்தாலே நோய், கழிவறை அருகே நோயாளி சாப்பிடும் நிலை, இப்படிப்பட்ட மோசமான நிலையில் தான், பொது மருத்துவமனை உள்ளது.
புதுச்சேரியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பது மேம்பாலம் கட்டுவது சுற்றுலாவை மேம்படுத்துவதில் மட்டும் தானா. இந்த விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்’ என்றார்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி