பூங்கா புதர்களில் தஞ்சமாகும் காதல் ஜோடிகள் சிங்க பெண்கள் அதிரடிப்படை களமிறங்குமா?
ஈரோடு,:ஈரோடு மாநகர மக்களின் ஒரே பொழுது போக்கு அம்சமாக வ.உ.சி., பூங்கா உள்ளது. இங்கு வேலை நாட்களில் பகலில் இளஞ்ஜோடிகள் தான் அதிகளவில் வருகின்றன. வழக்கமான புதர்களில் தஞ்சமடைந்து, பூலோகத்தை மறந்து பூங்காவை பூட்டும் வரை இருப்பர்.
அதன் பிறகே வேண்டா வெறுப்பாக செல்வர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லுாரி மாணவிகளாக இருப்பதுதான் வேதனை. இதுபோன்ற ஜோடிகளால் குடும்பத்துடன் வருவோர், சங்கடத்துக்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் தலையில் அடித்தபடி வேறிடத்துக்கு சென்றாலும், ஒரு சிலர் பூங்காவில் இருந்து உடனடியாக வெளியேறி விடுவதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு
ஒரு முடிவு வராதா? என்பதும், மக்களின் ஏக்கமாக உள்ளது.
இந்நிலையில் நேற்றும் பூங்காவுக்கு வழக்கம்போல் இளஞ்ஜோடிகள் வந்தனர்.; புதர்களில் தஞ்சம் அடைந்தனர். அதேசமயம் அப்பகுதிக்கு சிங்க
பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் போலீசாரின் வாகனம் வந்தது. அதில் வந்த பெண் போலீசாரிடம் இதுகுறித்து தகவல் தரப்பட்டது. இளஞ்ஜோடிகளை எச்சரித்து விரட்டி விடுவர் என்று எதிர்பார்த்த நிலையில், தங்களுக்கு வேறு வேலை இருப்பதாகவும், அதை முடித்து விட்டு நேரம் இருந்தால் வந்து பார்ப்பதாக கூறி சென்று விட்டனர்.
சிங்கபெண் போலீசாரை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், நடவடிக்கை எடுக்காமல் சென்று விட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.