இயற்கை வேளாண் விளைபொருள் உழவர் சந்தைகளில் விற்பனை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சம்பத் நகர், பெரியார் நகர், கோபி, பெருந்துறை, சத்தி, தாளவாடி என ஆறு இடங்களில் இயங்கி வரும் உழவர் சந்தைகளில் நவ.,1 முதல் இயற்கை வேளாண் விளை பொருட்களுக்கான சந்தை துவங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த சந்தை நடக்கும்.

விற்பனை செய்ய விருப்பமுள்ள இயற்கை விவசாயிகள், உழவர் சந்தைகளில் விண்ணப்பித்து, அதற்கான அடையாள அட்டை பெற்று விற்பனை செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு வேளாண் அலுவலர்களை, சம்பத் நகர், பெரியார் நகருக்கு கலையரசி - 96777 32229; பெருந்துறை, கோபிக்கு கண்ணன் - 99441 54563; சத்தியமங்கலம், தாளவாடிக்கு கனிமொழி - 81445 28873 ஆகியோரை, இந்த எண்களில் அணுகலாம்.

Advertisement