எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு காங்., அமைச்சர் ஆதரவு
பெங்களூரு: கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆதரவு தெரிவித்தது, மற்ற காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நாடு முழுதும் பல மாநிலங்களில் நடக்கிறது. இப்பணிகளால் லட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் நீக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ.ஆர்., பணிகளில், 99 லட்சத்து 32 லட்சம் 32,303 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக, கடந்த 27ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆளுங்கட்சி ஆதரவாளர்களின் ஓட்டுகள் திட்டமிட்டு பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், பொதுப்பணித்துறை அமைச்சரான சதீஷ் ஜார்கிஹோளி எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு ஆதரவாக நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் சரியாக நடந்தன. இறந்தவர்கள், வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு ஓட்டுகள் கொண்வர்களின் பெயர்கள் தான் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டு உள்ளன.
கர்நாடகாவில் நடந்த எஸ்.ஐ.ஆர்., பணிகளை நாங்கள் எதிர்க்கவில்லை. மாநில தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்த அழுத்தம், காங்கிரஸ் பூத் ஏஜன்டுகளுக்கு கொடுத்த பயிற்சியின் விளைவாக, மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர்., செயல்முறை சிறப்பாக நடந்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இவருடைய கருத்துக்கு உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மேலும்
-
தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமனம்
-
திமுக ஆட்சியில் பினாமி நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை; அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
-
குஜராத்தில் ரூ. 14,000 கோடி வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி
-
இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் ஏற்பேன்; சீமான்
-
மாநகராட்சி சமூகநலக் கூட பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு
-
4வது டி20யிலும் டாஸ் வென்ற இந்தியா... முதலில் பவுலிங் தேர்வு; அணியில் இரு முக்கிய மாற்றம்