மாநகராட்சி சமூகநலக் கூட பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு
சென்னை: மாநகராட்சி சமூகநலக் கூட பணியாளர்கள், சகி சேவை மைய ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை; தீப ஒளியை மகிழ்ச்சியாக கொண்டாட வகை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 113 சமூகநலக் கூடங்களில் பணியாற்றும் 600க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்க்கு கடந்த இரு மாதங்களாகவும், வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ள சகி எனப்படும் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாகவும் ஊதியம் வழங்கப்படவில்லை. மிகக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையிலும், அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையிலும் நியமிக்கப்பட்ட இந்த ஏழைத் தொழிலாளர்களை மாதக் கணக்கில் ஊதியம் வழங்காமல் துயரத்திற்கு உள்ளாக்குவது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தீப ஒளித் திருநாளுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இந்தத் தொழிலாளர்களுக்கு போனஸ் எனப்படும் மிகை ஊதியமோ, முன்பணமோ வழங்கப்படாது என்பதால், மிகக்குறைந்த ஊதியத்தைக் கொண்டு தான் தீப ஒளித் திருநாளை கொண்டாட வேண்டும். அந்த மிகக்குறைந்த ஊதியத்தைக் கூட 4 மாதங்கள் வரை வழங்காமல் இழுத்தடித்தால் அவர்களால் அன்றாட செலவுகளை எவ்வாறு சமாளிக்க முடியும், தீப ஒளித் திருநாளை எவ்வாறு கொண்டாட முடியும்? அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டும், அவர்கள் தீப ஒளித் திருநாளை துயரமில்லாமல், மகிழ்ச்சியாகக் கொண்டாட வசதியாகவும் அவர்களுக்கான ஊதிய நிலுவையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி