திமுக ஆட்சியில் பினாமி நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை; அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
சென்னை: சென்னை மாநகராட்சி அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்படுவதாக மேயர் பிரியா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் சென்னையில் செய்தியாளர்களிடம் பதிலளித்து பேசினார்.
அவர் கூறியதாவது; மேயர் சகோதரி பிரியாவுக்கு உரிய மரியாதை வழங்கப்படும். மழை, வெள்ளம் காலத்தில் யாரும் எங்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை. உடனடியாக ஓடி வந்தோம். ஏனென்றால், அங்கு தான் கட்டுப்பாட்டு மையம் இருக்கிறது. பலமுறை நான் வந்தேன். முந்தைய ஆட்சி என்று நினைத்து மேயர் பிரியா அப்படி பேசி விட்டார் போல.
வருவதை விளம்பரம் செய்யும் விளம்பர மாடல் அரசு கிடையாது. இது சத்தமில்லாமல் சாதனை செய்யும் விஜய் மாடல் அரசு. மேயருக்கு குறைபாடுகள் எல்லாம் வேண்டாம். பேரிடர் காலங்களில் கட்சி வேறுபாட்டை கடந்து, களத்தில் இறங்கி நிற்க வேண்டும்.
ஒவ்வொரு மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளை மேம்படுத்துவதும், நகராட்சி பணிகளாக இருக்கட்டும், மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. திமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடி கடன். கிட்டத்தட்ட ரூ.2 ஆயிரம் கோடி பற்றாக்குறை என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள். நீண்ட கால தீர்வு தராமல் அப்பப்போ அதை மூடி மறைத்துள்ளனர். ஒப்பந்ததாரர்களுக்கே நிலுவை தொகை வைத்துள்ளனர். பினாமி நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை வழங்கியுள்ளனர். முறையற்ற விஷயங்களை களைவதற்கும், முறையான விஷயங்களை செய்வதற்கும், சின்ன அவகாசம் தேவைப்படுகிறது. சிறந்த நகராட்சி நிர்வாகத்தை முதல்வர் விஜய் தருவார், இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
சந்துரு - ,
30 அக்,2026 - 18:51 Report Abuse
தாய் மாமன் தங்க மோதிரம் சப்ளை செய்யும் ஒரு பிரபல நகைக்கடை நிறுவனத்திற்கு ஒருவர் விளம்பர தூதராக முன்பு இருந்ததாக ஞாபகம்? 0
0
Reply
Nesan - JB,இந்தியா
30 அக்,2026 - 17:12 Report Abuse
திமுகவில் இருந்து வந்த வந்தேறிகள்தான் விஜய்க்கு தொல்லை கொடுத்து, கொள்ளை அடிக்கிறார்கள். உங்கள் மந்திரி, லாரி அப்பா அடிக்கிற கொள்ளை கொஞ்சம் நஞ்சம் நல்ல. கோடிக்கணக்கில் சொத்து. நான்கு முதல்வர்களுக்கு ஆலோசகராக இருந்து, எப்படி கொள்ளை அடிக்கலாமுன்னு காத்துக்கொட்டு வந்திருக்கும் அம்மணி. பாவம் விஜய். 0
0
Reply
ராஜா - ,
30 அக்,2026 - 16:22 Report Abuse
பினாமி நிறுவனங்கள் என்றால் அவற்றிற்கு பெயர், முகவரி, உரிமையாளர்கள் யாரும் இல்லையா? பேரம் பேசுவதற்கு இடத்தை வைத்துகொண்டு தான் அறிக்கைகள் வருகிறது. 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
30 அக்,2026 - 14:36 Report Abuse
எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி ........ மத்தவங்க யாரும் நடுவுல வரக்கூடாது ...... 0
0
Reply
GMM - KA,இந்தியா
30 அக்,2026 - 14:25 Report Abuse
தனியார் பள்ளிகள் புற்றுயீசல் போல் உள்ள நிலையில் மாநகராட்சி பள்ளிகள் இனி தேவையா? நகராட்சிகள் பிறப்பு இறப்பு பதிவு வீட்டு குப்பை அகற்றல், மயானம் போன்ற முக்கிய பணிகள் செய்தால் போதும். மாநகராட்சி பஸ் நிலையம் பராமரிக்கிறது. ஊழியர்கள் திறன் மிக குறைவு. வருமானம் குறைவு. ஊழல் உச்சம். மாநிலம் முழுவதும் நகராட்சி வரி விதிக்க பரிந்துரை. ஒப்புதல் அளிக்க ஒரு மைய அலுவலகம். அது போல பட்டா ரத்து, வழங்க பரிந்துரை. தாசில்தார் அப்படியே ஏற்று ஒப்புதல் தரும் நிலை. உரிய கண்காணிப்பு இல்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகள் மாநில அரசை கவிழ்த்து விடும். 0
0
Reply
மேலும்
-
இண்டி கூட்டணி பேரணியை தடுக்க மத்திய அரசு முயற்சித்ததா? ஆதாரத்தை காட்டுங்கள்; பாஜ கேள்வி
-
தேஜ கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை: நிர்மலா சீதாராமன்
-
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு முடித்து வைப்பு
-
முதல்வர் கோப்பையில் 15 பதக்கங்கள்
-
பஸ்சில் கிடந்த ரூ.30 ஆயிரத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
தந்தை மாயம் மகன் புகார்
Advertisement
Advertisement