ஆசிய பாரா, முதல்வர் கோப்பை வெற்றியாளருக்கு ஊக்கப்பரிசு வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு
சென்னை: ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனையர் மற்றும் முதல்வர் கோப்பையில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு, முதல்வர் விஜய் ஊக்கத்தொகை மற்றும் கோப்பை வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஜப்பானில் நடந்த, ‘பாரா’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற, ஒன்பது வீரர், வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகை மற்றும் முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கும் விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
விழாவில், முதல்வர் விஜய், ராமநாதபுரத்தில், 42.90 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஒலிம்பிக் நீர்விளையாட்டு வளாகம் மற்றும் சேலம், கரூரில் அரசு பொறியியல் கல்லுாரியில், 20 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஆசிய பாரா போட்டியில் வெற்றி பெற்ற ஒன்பது வீரர், வீராங்கனையருக்கு உயரிய ஊக்கத்தொகையாக, 6.25 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கி சிறப்பித்தார்.
விழாவில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், செங்கோட்டையன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
இந்த ஆண்டு முதல்வர் கோப்பை போட்டிகளில், 38 மாவட்டங்களில் இருந்து, 27 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மாவட்டம்தோறும் விளையாட்டு விடுதிகள் உருவாக்கப்பட்டு, 30,000 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
விளையாட்டு வீரர்களின் வேலைவாய்ப்பு இன்மையை போக்க, பதக்கம் வெல்வோருக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்படும். உலகத்தரம் வாய்ந்த பயிற்சிக்காக ‘கனவு ஒலிம்பிக்’ திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும்.
இவ்வாறு பேசினார்.
@block_B@
தமிழக அரசு சார்பில் நடந்த முதல்வர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாவட்ட அணிக்கு, முதல்வர் விஜய் பரிசுக்கோப்பை வழங்கினார்.
சென்னை மாவட்ட அணி 142 தங்கம், 97 வெள்ளி, 80 வெண்கலம் என, 319 பதக்கங்கள் குவித்து முதலிடம் பிடித்தது.
செங்கல்பட்டு அணி 64 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலம் என 143 பதக்கங்களுடன் இரண்டாமிடமும், கோவை அணி 118 பதக்கங்களுடன் மூன்றாமிடமும் பிடித்தன.block_B
@block_B@
பேட்மின்டன் வீரர்கள் துளசிமதி முருகேசனுக்கு 1.75 கோடி; நவீன் சிவகுமாருக்கு, 1.05 கோடி; நித்யா ஸ்ரீ சுமதி சிவனுக்கு 80 லட்சம்; மனிஷா ராமதாசுக்கு 60 லட்சம்; சிவராஜன் சோலை மணி 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
நீளம் தாண்டுதல் வீரர் சோலைராஜுக்கு 75 லட்சம்; டேபிள் டென்னிஸ் பேபி சஹானா 30; மதன் 60 லட்சம்; பளுதுாக்குதல் வீராங்கனை கஸ்துாரி ராஜா மணிக்கு 50 லட்சம் என மொத்தம், 6.85 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.block_B
மேலும்
-
எந்தவொரு நாட்டுக்கும் குவாட் கூட்டமைப்பு எதிரி கிடையாது; அமெரிக்கா திட்டவட்டம்
-
ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி