ராகுலின் நோக்கம் என்ன? பாஜ தலைவர் நிதின் நபின் கேள்வி

2

ரோதக்: எஸ்ஐஆர் விவகாரத்தில் காங்கிரஸ் நடத்தும் போராட்டத்திற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஹரியானாவில் பாஜ தலைவர் நிதின் நபின், ஹரியானாவின் ரோதக் பகுதியில் பேரணி நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் ஜனநாயக அமைப்புகளை காங்கிரஸ் தாக்குகிறது. வாரிசு அரசியலை வளர்க்க அரசியல் அமைப்பின் பாதுகாவர்கள் போல் காட்டி கொள்கின்றனர். அரசியல் அமைப்பு நெறிமுறைகளை சீர்குலைக்கின்றனர்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு உண்மையில் பலம் இருந்தால், அவர்கள் முதலில் தங்கள் கட்சியி்ல் நீடிக்கும் ராகுலின் வாரிசு அரசியலை தகர்த்து ஜனநாயகத்தை நிறுவி இருப்பார்கள். காங்கிரஸில் ஒரே குடும்பத்தின் ஆட்சிக்கு மட்டுமே இடம் இருக்கிறது. ராகுலோ அல்லது அவரது குடும்பத்தினரின் உத்தரவு தான் முழுமையான உண்மை என்று தலைவர்கள் செயல்படுகிறார்கள். இந்த நாட்டின் சட்டங்கள் ராகுலின் விருப்பங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும் என நம்புகிறார்கள். நீங்கள் அரசியல் அமைப்பின் ஒரு பிரதியை கையில் ஏந்தி சுற்றுகிறீர்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதன் பக்கங்களை கிழித்து சின்னாபின்னமாக்கி உள்ளனர்.

140 கோடி மக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. பிறகு யாரை நம்புவீர்கள். 3 கோடி ஊடுருவல்காரர்களையா? உங்களின் உண்மையான நோக்கம் என்ன என ராகுலை கேட்க விரும்புகிறேன். ஜனநாயகத்திற்கு ஏன் சவால் விடுக்கின்றீர்கள். ஜனநாயகத்தில் மக்களின் உத்தரவு முக்கியமானது. தோல்வியை ஏற்க வேண்டும். இவ்வாறு நிதின் நபின் பேசினார்.

Advertisement