வாடிக்கையாளர் பணப் பாதுகாப்புக்கு வங்கிகளே பொறுப்பு!: 'டிஜிட்டல்' மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-சிறப்பு நிருபர்-
'டிஜிட்டல் மோசடிகளில் வங்கிகளின் உரிய கண்காணிப்பு குறைபாடு காரணமாக வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தது உறுதியானால், இழந்த தொகையை வங்கிகளே இழப்பீடாக வழங்க வேண்டும். இதற்கான விதிகளை ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களில் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும் பணப் பரிவர்த்தனைகள், 'டிஜிட்டல்' மயமாகி வருகின்றன. அதே போல், டிஜிட்டல் முறையில் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து திருடும் கும்பலும் அதிகரித்துவிட்டன. குறிப்பாக, டிஜிட்டல் கைது என்ற பெயரில், மூத்த குடிமக்களை குறிவைத்து, கோடிக்கணக்கில் பணம் பறிக்கப்படும் சம்பவங்கள் வாடிக்கையாகி வருகின்றன. இதை தடுப்பதற்காக மத்திய அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
'போலி ஆவணங்கள் தொடர்பான டிஜிட்டல் கைது மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள்' என்ற பெயரிலான வழக்கை, உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா அடங்கிய அமர்வில், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
கடமை
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கும் கடமை வங்கிகளை சார்ந்தது. வங்கிகளின் கண்காணிப்பில் குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக 'டிஜிட்டல் கைது' அல்லது இணையவழி பண மோசடி நடந்திருப்பது உறுதியானால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அவர் இழந்த தொகைக்கு ஈடான இழப்பீட்டை வங்கிகளே வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிகளில் இதனை கட்டாயமாக்க வேண்டும்.
இவை எல்லாம் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள். வங்கிகள் மீது அபராதம் விதிக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், தவறுகளை திருத்திக் கொள்ள வங்கிகள் நிச்சயம் முன்வராது.
வாடிக்கையாளரின் வழக்கமான பணப் பரிவர்த்தனை முறையிலிருந்து மாறுபட்டு, திடீரென அதிக தொகை எடுக்கப்படுவது போன்ற சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை வங்கிகள் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
அத்தகைய பரிவர்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்துவது, சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை தானாகவே அதிகாரிகளுக்குத் தெரிவிப்பது, பரிவர்த்தனையின் உண்மைத்தன்மையை நேரடியாகச் சரிபார்ப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
வாடிக்கையாளர் ஒருவர், வழக்கமாக ஒருமுறைக்கு 10,000 ரூபாயோ அல்லது 20,000 ரூபாயோ எடுக்கபவராக இருக்கலாம். அவரது வங்கி கணக்கில் இருந்து திடீரென 50,000 ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்திருந்தால், அதை வங்கி ஏன் சந்தேகத்துக்குரியதாக கருதக் கூடாது.
சரிபார்ப்பு
'டிஜிட்டல் கைது' மோசடி மூலம் கோடிக்கணக்கான ரூபாயை பொதுமக்கள் இழந்துவிட்டனர். ஆனால், இன்னும் அந்த மோசடிகளை தடுக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. வங்கிக் கணக்குகளை அவற்றின் தன்மைக்கு ஏற்ப ஏன் வகைப்படுத்தக் கூடாது?
நீண்டகாலமாகப் பணம் சேமிக்கும் தனிநபர்களின் கணக்குகள் குறித்த முழு விபரங்களும் வங்கிகளிடம் உள்ளன. இதற்காக ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தலாம்.
ஒரு வங்கி கணக்கில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் திடீரென அதிக தொகை பரிவர்த்தனை நடந்தால், உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தானாகவே தகவல் செல்லும் நடைமுறையை உருவாக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர் தன் விருப்பத்தின் பேரில் தான் பணம் அனுப்புகிறாரா? அல்லது 'டிஜிட்டல் கைது' மோசடி பேர்வழிகளின் மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறாரா? என்பதை போலீசார் சரிபார்க்க முடியும்.
பணத்தை இழந்த பின் அறிக்கை தயாரிப்பது, பிரேத பரிசோதனை செய்வது போன்றது; மோசடி நடக்கும் முன்பே தடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது வங்கிகளின் கடமை. இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் என்ன செய்கின்றனர்?
விதிகளில் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரிவு இடம்பெற வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்ற உத்தரவின் மூலம் அதைச் செயல்படுத்துவோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
யாரு பொறுப்பு ன்னு விவாதம் போயிட்டு இருக்கு .... முடிவாகுறதுக்குள்ள பங்களாதேஷ் கூட வல்லரசு ஆயிரும் .....
நாடு முழுவதும் ஒருவருக்கு ஒரு வங்கி வாடிக்கையாளர் எண். ஒரு மொபைல் எண். அதன் வழியே அதிக பட்சம் 4 கணக்கு, 4 மொபைல் எண். பழைய வங்கி கணக்கை 31 மார்ச் அன்று மூடி வைக்க வேண்டும். யு பி ஐ பரிவர்த்தனையில் மொபைல் எண் அல்லது வாடிக்கையாளர் பெயர் மூலம் மட்டும். டிஜிட்டல் கைது என்ற ஒன்று உள்ளதா? நேர்மையான நபர்கள் ஏன் அஞ்ச வேண்டும்? அதிக பரிவர்த்தனை என்றால் பழைய பாஸ் வேர்ட் ஏற்க கூடாது. புதிய ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட கடவு சொல் பயன் படுத்த வேண்டும். இது புதிய நபருக்கு தெரியாது.
திடிரென முழிக்கிறான் மொத்தமா தூங்கறான்
வாழ்த்துக்கள் சுப்ரீம் கோர்ட். வங்கிகள் யாருக்கு என்ன விதமான சேவை தேவையோ அதை மட்டும் கொடுத்தால் போதும். இண்டர்நேஷனல் ஏடிஎம் கார்டு மற்றும் உள்நாடு மற்றும் அவரவர் மாநிலம் என பிரித்து ஏடிஎம் கார்டு கொடுக்கும். இதை போல ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்ய அனுமதி கொடுக்கலாம்
இதன் மூலம் வாடிக்கையாளர் தன் விருப்பத்தின் பேரில் தான் பணம் அனுப்புகிறாரா? அல்லது டிஜிட்டல் கைது மோசடி பேர்வழிகளின் மிரட்டலுக்கு ஆளாகி இருக்கிறாரா? என்பதை போலீசார் சரிபார்க்க முடியும்.
போலீசார் சரிபார்த்தால் இருப்பதையும் புடுங்கிட்டு நடுத்தெருவில் விட்டுருவானுகளே.
நாம் பணம் போடும்போது ஆயிரம் கேள்விகள் கேக்கும் வங்கிகள் அடுத்தடுத்து இவ்வளவு பெரிய பணம் கய் மாறும் போது ஏன் கேள்விகள் கேற்க படுவதில்லை.
பத்து ரூபாய் பரிசு ரெடி ன்னு ஒரு லிங்க் வந்தால் உடனை காசு வெறியோடு எவன் அழுத்த சொன்னது? வங்கியா? நம்ம ஜனங்களுக்கு உழைக்காமல் கோடீஸ்வரனாகும் பேய் வெறி... அப்புறம் அனுபவிக்க வேண்டியதுதான்.....
ஏற்கனவே பணம் கொஞ்சம் அதிகமாக எடுக்கும் போது எதற்காக எடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள், என் பணத்தை எடுக்க உங்களுக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள், இதில் எவ்வளவு விழிப்புணர்வு message கொடுத்தாலும் Link வந்தால் ஆசையில் அழுத்தி பணத்தை இழக்கிறார்கள்.
டிஜிட்டல் கைது என்று ஒன்று இருக்கமுடியாது என்பது சட்டம் அறிந்தவர்களிடையே கூட இல்லாததுதான் அறியாமையின் உச்சம் .எல்லா ஊடகங்களில் ,செய்தித்தாளிகளிலும் தொலைக்காட்சிகளிலும் வவிழிப்புணர்வு செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் .போன் மணி ஒலித்தவுடனே ஹலோ சொல்லக்கூடாது . தெரியாத நபராயிருந்தால் நிராகரிக்கவேண்டும் .பெயரை தெரியாமல் இருந்தாலும் நிராகரிக்க வேண்டும் .படித்தவர்களும்பெறிபோவதுதான் அறியாமையின் உச்சம் .கண்ணக்குவைத்தொருப்பவர்களே மோசடிக்கு துணைபோகும் போது தடுப்பது கடினமே.இதுபோன்ற நிகழ்வுகள் வரும்போது குறைந்தபட்சம் வங்கிக்கு போன் செய்தாவது இதைப்பற்றி பேசவேண்டும் .
நுகர்வோருக்கு போதிய எச்சரிக்கைகளை தக்க சமயத்தில் வழங்கினால் மோசடிகளை தவிர்க்க முடியும்.மேலும்
-
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்: ஆண்டிபட்டி வாரச்சந்தை ரூ.3.50 கோடியில் கட்டிய கடைகள் வீணாகிறது
-
போடி ரோட்டில் ஆபத்தான பேனர்கள் ஆக்கிரமிப்பு
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி - எப்18: அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய மைல்கல்!
-
வாக்காளர்ள பட்டியல் சிறப்பு திருத்தம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
-
மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் மீது வழக்கு