போடி ரோட்டில் ஆபத்தான பேனர்கள் ஆக்கிரமிப்பு
போடி: போடி மெயின் ரோட்டை ஆக்கிரமித்து ஆபத்தான நிலையில் பேனர்கள் வைத்து வருவதால் வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் நெடுஞ்சாலை, நகராட்சி, பேரூராட்சி மெயின் ரோட்டில் அருகே பேனர் விளம்பர பலகைகள் வைக்க கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
ஆனால் போடி பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம், காமராஜ் பஜார், சார்பதிவாளர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை, பழைய பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட மெயின் ரோடு, வர்த்தக கடைகளை ஆக்கிரமித்து அரசியல் கட்சியினர், தனி நபர்கள் குடும்ப விழாக்களுக்கு பேனர் விளம்பர பலகைகள் வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அனுமதி இன்றி வைக்கப்படும் பிளக்ஸ், பேனர்களை நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி அதிகாரிகள், போலீசாரும் கண்டு கொள்வது இல்லை.
இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கிறது. இதனால் வியாபாரிகளும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொது மக்கள் நடந்து, டூவீலரில் கூட செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறு, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் போடி மெயின் ரோட்டில் வைக்கப்பட்டு உள்ள பேனர்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க பொது மக்கள், வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு