விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி - எப்18: அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய மைல்கல்!
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான 'என்.வி.எஸ் - 03' செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட், இரவு 11.51 மணிக்கு, விண்ணில் வெற்றிகரமாகச் சீறிப்பாய்ந்தது. திட்டமிட்டபடி பயணித்த செயற்கைக்கோள், நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் கம்பீரமாக விண்ணை நோக்கிப் பாய்ந்தது. 2,250 கிலோ எடையுள்ள என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ராக்கெட் சீறிப் பாய்ந்ததும், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
முக்கிய அம்சங்கள்:
ஆரம்பக் காலங்களில் பல்வேறு தொழில்நுட்ப சவால்களைச் சந்தித்த ஜி.எஸ்.எல்.வி., தொடர் வெற்றிகள் மூலம் தற்போது அபார வளர்ச்சி கண்டுள்ளது. சுமார் 50 மீட்டர் உயரமும், 420 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட்டின் 20வது வரலாற்றுப் பயணம் இதுவாகும்.
அணுக்கடிகாரம்:
வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களின் துல்லியமான செயல்பாட்டிற்கு நேரம் மிக முக்கியமானது. முன்பு வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடிகாரங்களில், பிரச்னைகள் ஏற்பட்ட நிலையில், இந்த செயற்கைக்கோளில் முற்றிலும் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட உயர்தர 'ரூபிடியம் அணுக்கடிகாரம்' பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜி.பி.எஸ்., அமைப்பைச் சார்ந்திருக்காமல், இந்தியாவின் சொந்த வழிகாட்டுதல் கட்டமைப்பான நாவிக் அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி நமது எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 1,500 கி.மீ., சுற்றளவு வரை துல்லியமான வழிகாட்டுதல் தகவல்களை வழங்குவதே இதன் இலக்கு.
பொதுமக்கள், ராணுவ பயன்பாடு:
இந்த இரண்டாம் தலைமுறை என்.வி.எஸ்., வரிசை செயற்கைக்கோளில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் 'எல்1' அலைவரிசை சிக்னல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிர்காலத்தில் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் வாகன நேவிகேஷனில் 'நேவிக்' பயன்பாடு எளிதாகும். அதே சமயம் நாட்டின் பாதுகாப்புப் படையினரின் துல்லியமான கண்காணிப்புத் தேவைகளுக்கும் இது பெரும் பலமாக அமையும்.
@block_B@
'ஜி.எஸ்.எல்.வி - எப்18' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 'என்.வி.எஸ் - 03' செயற்கைக்கோள், திட்டமிட்டபடி நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திட்டம் வெற்றி பெற்றதாக, இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.block_B
@block_Y@
செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட பின் உரையாற்றிய இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது: 56 நாட்களில் திட்டம் நிறைவேறியுள்ளது. வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். இத்திட்டத்திற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நேவிக் செயற்கைக்கோள் இந்தியாவின் சொத்து. தேசத்தின் பொக்கிஷம். இவ்வாறு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.block_Y
வாழ்த்துக்கள் அறிஞர்களே
நல்லதை பாராட்டுவோம் வரவேற்போம்
Mission Accomplished.
GSLV F18 successfully places NVS 03 into its intended orbit. Another milestone. Another reminder of Indias growing space dominance. Proud of you, ISRO. Jai Hind!
விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்
விஞ்ஞாசானிகள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
அதிலிருந்து பேனா சிலை தெரியுமா?
gr8 Indian Scientiest .. Congrats
வெற்றி வெற்றி விண்வெளியில் சாதனை பெற்று வெற்றி
Despite relentless internal and external conspiracies Modi Government is taking the country forward.
இங்கே ஒரு வீனா போனவன் மேக் இன் இந்தியா உள்நாட்டு தயாரிப்பு இருண்ட பொருளாதாரம் அப்டின்னு வெளிநாட்டுக்கு போய் கூறுவார். வியட்நாமில் ஜல்சா முடிந்து வருவார். அடுத்ததாக எதை செய்து நாட்டிற்கு எதிராக செய்யலாம் என இருக்கும் பிறவி...
வரவர காங்.சாரே அவனை மதிக்கிறது இல்லை!மேலும்
-
சாமானியர்களை பாதிக்கும் மளிகை விலை உயர்வு மூன்று மாதங்களில் கட்டுக்குள் வருமென எதிர்பார்ப்பு
-
பாதுகாப்பு மையங்களில் உள்ள சிலைகள் விரைவில் கோவில்களுக்கு மாற்றம்: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை பதில்
-
நிறுவன செய்திகள்
-
மின் வாகன உதிரிபாக உற்பத்திக்கு அதிகம் முதலீடு செய்ய வேண்டும்
-
உலகின் பெரும்பகுதி நாடுகளில் இந்திய பொருட்களுக்கு சலுகை
-
வீட்டில் புகுந்த 2 மர்மநபர்கள் பெண்ணை மிரட்டி நகை பறிப்பு