மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் மீது வழக்கு
கடலுார்: இரண்டாவது திருமணம் செய்ததை தட்டிக் கேட்ட மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கடலுார், உண்ணாமலை செட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் விஜயராஜ்,40; இவருக்கும், தனியார் பள்ளி ஆசிரியை சரண்யாதேவி,32; என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, சரண்யாதேவி பெற்றோர் 50 சவரன் நகை, வீட்டு உயோக பொருட்கள், திருமண செலவிற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினர். சரண்யாதேவி கர்ப்பமான நிலையில், குழந்தையை ஸ்கேன் செய்த போது, குழந்தைக்கு கிட்னி பிரச்னை இருந்தது தெரிந்தது.
கர்ப்பத்தை கலைத்தால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும் என, விஜயராஜ் கூறினார். இதையடுத்து ஓசூரில் தங்கி வேலை செய்த விஜயராஜ் கோயம்புத்துாரைச் சேர்ந்த கோமதியை இரண்டாவது திருமணம் செய்தார். இதனை தட்டிக்கேட்ட சரண்யாதேவியை, விஜயராஜ் மொபைல் போனில் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். இதற்கு அவரது தாய் ராணி, 65; தந்தை செல்வராஜ்,70; ஆர்த்தி ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். புகாரின் பேரில், கடலுார் அனைத்து மகளிர் போலீசார், விஜயராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு