வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 2026-ம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமை தாங்கினார். தொடர்ந்து சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளுக்கான கால அட்டவணை, பல்வேறு கட்டங்களாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

கூட்டத்தில் தகுதியுள்ள குடிமக்களை வாக்காளர் பட்டியலில் புதிதாகச் சேர்த்தல், இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல், பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் பட்டியலில் தேவையான இதர மாற்றங்களைச் செய்தல் தொடர்பான நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்பட்டது.

ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள், அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் சேர்ந்து செயல்பட்டு, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத தகுதியுள்ள வாக்காளர்களை கண்டறியவும், வாக்காளர் பட்டியலில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகளைத் தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement