உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் வெண்கலம் வென்ற ஓமலுார் மாணவி

ஓமலுார்: சேலம் மாவட் டம் ஓமலுாரை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவி தனிகா. ஓமலுாரில் உள்ள, தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

மாவட்ட, மாநில, தேசிய போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளர். இவர் சீனாவில் கடந்த, 26 முதல், நாளை வரை நடக்கும், 5வது உலக ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்றார். அவர், தனி நபர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ந்த்துள்ளார். அவருடன் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வைஷாலியும் இணைந்து விளையாடினார்.உலக போட்டியில் வெண்கலம் வென்ற தனிகாவுக்கு, இந்தியன் சாப்ட் டென்னிஸ் அகாடமி, தமிழ்நாடு சாப்ட் டென்னிஸ் அகாடமி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement