மும்முனை மின்சாரம் இரவில் இல்லை

பொங்கலுார்: பொங்கலுார் பகுதியில் கடந்த 10 நாட்களாக இரவு நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விவசாயத்துக்கு பகலில் 8 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் இருமுனை மின்சாரமே கிடைக்கிறது. இந்நிலையில், இரவு நேர மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழை ஓய்ந்து வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டார்களை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இரவு நேரம் உட்பட விவசாயத்துக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement