வேலை வாங்கி தருவதாக மோசடி
சிவகங்கை: கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண் புரோக்கர் ஒருவர் ரூ.65 ஆயிரம் கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து, இடைத்தரகர்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறையில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.65 ஆயிரம் கட்ட வேண்டும் என பெண் ஒருவரிடம், பெண் இடைத்தரகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை நம்பிய பெண் முன்பணமாக ரூ.3,000 வழங்கியுள்ளார். அதில் சந்தேகமுற்ற பெண், கலெக்டர் ஆகாஷிடம் புகார் செய்தார். சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார்.
கலெக்டர் கூறியதாவது: அரசு அலுவலகம், நில பதிவு மையம், மருத்துவமனைகளில் இடைத்தரகர்கள் போல் செயல்பட்டு, மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுவதாக புகார் வந்துள்ளது. இடைத்தரகர்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம். அரசு வேலை அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு மூலம் மட்டுமே நிரப்பப்படும்.
இது தவிர முதியோர் உதவி தொகை, இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி இடைத்தரகர்கள் யாரிடமும் மக்கள் பணம் தராமல் விழிப்புடன் இருக்க வேண்டும் எந்த ஒரு அரசு வேலைக்கும் இடைத்தரகர்களை நாடாமல், அரசு அலுவலகங்களில் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்