ஜரிகை விற்பதாக ரூ.1.22 லட்சம் மோசடி

சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த, 38 வயதுடையவர், ஜவுளி கடை வைத்து தொழில் செய்கிறார்.

இவரது பேஸ்புக்கில் கடந்த ஜூனில், ஜரிகை, பாலிஸ்டர் விற்பனை தொடர்பாக ஒரு விளம்பரம் வந்தது. அதை பார்த்த அவர், அதில் இருந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர், 'ஜரிகை பாலிஸ்டர் குறைந்த விலையில் கொள்முதல் செய்து கொள்ளலாம்' என கூறியுள்ளார். அதை நம்பி கடைக்காரர், ஆர்டர் கொடுத்தார். அதற்கு முன்பணம், போக்குவரத்து செலவு குறித்து கேட்க, 3 தவணையாக, 1.22 லட்சம் ரூபாயை, அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தினார். பின் மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஜரிகை பாலிஸ்டரும் வரவில்லை.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கடைக்காரர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில், மோசடியில் ஈடுபட்ட நபர்கள், 3 வங்கி கணக்குகளை பயன்படுத்தியது தெரிந்தது. அந்த கணக்குகளை முடக்கி, மோசடி பணத்தை மீட்க, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement