டில்லி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம்: பண்டிகை கால பயணியர் கூட்ட நெரிசலை தடுக்க, திருவனந்தபுரம் - டில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே, சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி வரும் நவ., 2, 9, 16 ஆகிய திங்களன்று மதியம், 2:00 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்படும் ரயில், புதன் இரவு, 11:50 மணிக்கு டில்லியை அடையும். இந்த ரயில் செவ்வாய் அதிகாலை, 1:45 மணிக்கு சேலம் வந்து செல்லும்.மறுமார்க்க ரயில், நவ., 5, 12, 19 ஆகிய வியாழனன்று அதிகாலை, 5:45 மணிக்கு டில்லியில் புறப்பட்டு, சனி மாலை, 4:30 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். சனி அதிகாலை, 3:55க்கு சேலம் வந்து செல்லும். இந்த ரயில்கள், போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்பட பல்வேறு ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
விவேக் எக்ஸ்பிரஸ் ரத்து
கனமழையால், விசாகப்பட்டினம் ரயல்வே கோட்டத்தில் உள்ள பாலத்தில், வெள்ளநீர் செல்கிறது. பாதுகாப்பு கருதி ஷாலிமாரில் இருந்து நேற்று மதியம், 2:30 மணிக்கு, மங்களூருக்கு புறப்பட வேண்டிய விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement