நோட்டர் டேம் ஆப் ஹோலிகிராஸில் ஏ.ஐ., ரோபோடிக் ஆய்வகம் திறப்பு
சேலம்: சேலம், உடையாப்பட்டி, குண்டுக்கல்லுார், நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளி, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படுகிறது.
அங்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் ஆய்வக திறப்பு விழா நடந்தது. சாலி ஆப்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜ் விக்னேஷ் நவநீதன் தலைமை வகித்து, ஆய்வகத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: அறிவியல் தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அவற்றில் செயற்கை நுண்ணறிவு, முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே செயற்கை தொழில்நுட்ப செயல்முறைகளை கற்று, பல நல்ல செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வேண்டும். இனி வரும் காலத்தில், செயற்கை நுண்ணறிவு, மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அத்தகைய செயற்கை நுண்ணறிவை, மாணவர்கள் கற்க, இந்த ரோபோடிக் ஆய்வகம் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் ஜேசுராஜ், நிர்வாகி குழந்தைசாமி, துணை முதல்வர் பிரேம்சந்தர், அருட்சகோதரர் கிறிஸ்டி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
சென்னையில் விடிய விடிய மழை; முரசு புயல் குறித்து வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
-
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
-
நிலப்பிரச்னையில் முன்விரோதம் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு
-
தட்டை பயறு அறுவடை துவக்கம் விரைவில் சந்தைகளில் விற்பனை
-
'டீ'க்கு காசு கேட்டதால் அடி ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
-
காவிரி உபரிநீரை முள்ளிப்பாடி பெரிய ஏரிக்கு கொண்டுவர ஆய்வு