5 ஆண்டுக்கு முன் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு அழைப்பு
சேலம்: கெங்கவல்லி, கூடமலை, தெடாவூர், வீரகனுார், ஆறகளூர், காமக்காபாளையம், புளியங்குறிச்சி, தம்மம்பட்டி நகரம், தம்மம்பட்டி புறநகர், உலிபுரம், கீரிப்பட்டி, செந்தாரப்பட்டி பகுதிகளை உள்ளடக்கியது,
சேலம் மின் பகிர்மான கோட்ட பிரிவு அலுவலகங்கள்.இப்பகுதி விவசாயிகளில், விவசாய மின் இணைப்பு கேட்டு, 2023 மார்ச், 31 வரை பதிவு செய்தவர்களில், சாதாரண வரிசையில் இலவச மின் இணைப்பு வழங்க, 2021ம் ஆண்டு வரை பதிவு செய்தவர்களுக்கு, அறிவிப்பு கடிதங்கள் வழங்கப்பட்டன.
இதில் விண்ணப்பித்தவர்களில் சிலர் இறந்துவிட்டனர். சிலர் வெளியூர் சென்றுவிட்டனர். இதுபோன்ற பல காரணங்களால் அறிவிப்பு கடிதங்கள் பெற முடியாதவர்களுக்கான, 5 ஆண்டு அவகாசம், வரும் அக்., 31, நவ., 30 மற்றும் டிச., 31க்குள் முடிகிறது.
அதனால் விண்ணப்பதாரர்களின் வாரிசுகள், விண்ணப்பதாரர்கள், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மின்வாரிய பிரிவு அலுவலகங்களை தொடர்பு கொண்டு, மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். கால அவகாசம் முடிந்த பின், விண்ணப்பங்களை பரிசீலிக்காமல் ரத்து செய்யப்படும் என, கெங்கவல்லி மின்வாரிய செயற்பொறியாளர் வீரபத்ரன் அறிவித்துள்ளார்.
மேலும்
-
டேப் ஒட்டிய விமான ஜன்னல்; பீதியை கிளப்பியது ஸ்பைஸ்ஜெட்
-
தீபாவளிக்கு முன் தங்கம் வாங்குவோருக்கு நிம்மதி
-
டிவிகளில் ஆபாச விளம்பரங்கள் முன்தணிக்கை செய்ய வழக்கு: அரசு தரப்பிற்கு உத்தரவு
-
செம உதை வாங்கி மண்ணைக் கவ்விய காங்கிரஸ்! : அந்துமணி பதில்கள்
-
ஸ்டார்ட் அப், ஏ.ஐ.எப்., பண்டுகளில் பி.எப்., பணத்தை முதலீடு செய்ய திட்டம்
-
சந்தை விலை நிலவரம்