ரேஷன் கார்டுக்கு ரூ.6,000 லஞ்சம் உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை
சேலம்: சேலம், சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்தவர் முருகன், 38. இவர், 2015ல், புது ரேஷன் கார்டு கேட்டு, சேலம் மேற்கு தாலுகா அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு அலுவலக உதவியாளராக பணியாற்றிய, மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த அந்தோணிதாஸ், 50, என்பவர், 6,000 ரூபாய் கொடுத்தால் ரேஷன் கார்டு கிடைக்கும் என கூறியுள்ளார்.இதுகுறித்து முருகன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அறிவுரைப்படி, முருகன், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்தோணிதாஸிடம் கொடுத்தார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்த போலீசார் வழக்குப்பதிந்தனர். இதன் விசாரணை, சேலம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் அந்தோணிதாஸூக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தோத்திரமேரி நேற்று உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement