சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி பலி
திருச்செங்கோடு:திருச்செங்கோடு
அடுத்துள்ள சித்தாளத்துார் பஸ் நிறுத்தம் அருகில், சாலையை கடக்க
முயன்ற பந்தல் போடும் தொழிலாளி, கார் மோதி பலியானார்.
திருச்சி,
வரகனேரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 52, இவர்
சித்தாளந்துாரில் உள்ள மைக்செட் கடையில் வேலை செய்து கொண்டு, அங்கேயே
தங்கி பந்தல் போடும் வேலை வந்தார். இவர் நேற்று முன்தினம், வேலைக்கு
சென்று விட்டு அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு செல்ல, ப.வேலுார்
சித்தாளந்துார் மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது
திருச்செங்கோட்டில் இருந்து, பரமத்தி நோக்கி சென்ற ஸ்கார்பியோ கார்,
முருகேசன் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது.
கார் மோதி துாக்கி
வீசப்பட்ட முருகேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர்
இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திருச்செங்கோடு ரூரல்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தீபாவளிக்கு புது வரவு பட்டாசு என்னென்ன; அனைவரையும் குஷிப்படுத்த தயாரானது சிவகாசி!
-
நாடு முழுவதும் இன்று 9.34 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,680 கோடி நிதியுதவி விடுவிக்கிறார் பிரதமர் மோடி
-
அர்னாப் புயல் ஆந்திராவை தாக்கியது எப்படி? படத்தை வெளியிட்டது நாசா
-
பல்லாங்குழி சாலையால் பொது மக்கள் பாதிப்பு
-
வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சி
-
ஆந்திரா பொன்னி விதை நெல் விற்பனை மும்முரம்