விஜய் போலவே நடிகர் தனுஷுக்கும் 'ஜாக்பாட்' அடிக்கும் என நம்புகின்றனர்: பழனிசாமி கருத்து
மதுரை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மதுரை யில், நேற்றளித்த பேட்டி: மின் பற்றாக்குறை இருப்பது போல், செயற்கையாக ஒரு பிம்பத்தை உருவாக்கி, தற்போது, யூனிட் ஒன்றுக்கு, 37.50 ரூபாய் கொடுத்து மின் கொள்முதல் செய்கின்றனர். இதனால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
த.வெ.க., ஆட்சியில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளை பாதுகாப்பதிலும் அரசு தோற்று விட்டது. செஞ்சியில் ஏழு வயது சிறுமி காணாமல் போய், ஒரு வாரமாகியும் தீர்வு கிடைக்கவில்லை.
பெண்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அரசு ஊழியர்கள் விடுமுறையில் இருப்பதைப் போல முதல்வரும் செயல்படுகிறார். இந்தியாவிலேயே மோசமான ஆட்சி என்றால் அது விஜய் தலைமையிலான ஆட்சி தான்.
இந்தியா, ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு எப்படி ஒரு 'ஜாக்பாட்' அடித்ததோ; அதேபோல், நடிகர் தனுஷுக்கும் ஒரு 'ஜாக்பாட்' அடிக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
மதுரையில் நேற்று மாலை, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பழனிசாமி சென்றார். அப்போது, கோவிலில், சில நிமிடங்கள் மின் தடை ஏற்பட்டது.
இது பற்றி, பழனிசாமி கூறுகையில், “கடுமையான மின்வெட்டிற்கு, இதுவே சான்று. கோவிலில், மின்வெட்டு ஏற்பட்டதை, மீனாட்சி அம்மன் பார்த்தால் சரி. பக்தர்கள், நிம்மதியாக இறைவனை பிரார்த்தனை கூட செய்ய முடியவில்லை,” என்றார். ஆனால், 'மின்சார லைனை, மாற்றி விடும்போது, இதுபோன்று மின்தடை ஏற்படுவது வழக்கம்' என, கோவில் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்தனர்.block_B
சந்தர்ப்ப வாத சுயநல வாதியான உன் மூஞ்சியை காட்டாதே.
ஜாக்பாட் இவருக்கும் மகனுக்கும் அடிக்கிற மாதிரி இப்போதைக்கு தெரியல? இவருக்கு சுள்ளானை பத்தி என்ன கவலை?
எடபடியும் , பிஜேபி கொடுக்கிற dhayriathil இந்த சுள்ளான் பய நானும் cm அகா முடியாத துள்ளி குடிக்காது. அது கண்ணுக்கு விஜய் மட்டும் தான் தெரியுது. மண்ணை காவிய விஷால் எல்லாம் தெரியலை போல. வரிசையா ரெண்டு படம் ஊத்துச்சுன்னா விஷால் மாதிரி பொட்டி pamaba படுத்துக்குவான் அது சொற்பமே உள்ள ரசிக கூட்டத்துக்கு தெரியலையே?
பழனிசாமிக்கே ஜாக்பாட் அடித்து பதவி கிடைத்த பொழுது சுள்ளானுக்கு கிடைக்காதா என்ன?
ஜெ போல உங்களுக்கும் ஜாக்பாட் அடிக்கும்ன்னு நீங்க கூடத்தான் நம்புனீங்க ......
அது என்ன பழனிச் சாமி வரும் போதுதான் கரெக்டாக லைனை மாற்றி விடுவார்களா? எதற்காக கோவில் நிர்வாகத்தினர் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்?
மின்சார மாற்று வழி செய்யும் நேரத்தில் கோவிலில் தரிசனம் செய்ய சென்றால் மின்தடையை சிறிது மணித்துளிகள் சந்தித்தே ஆக வேண்டும்
திருட்டு திராவிட ஆட்டிகளில் இவர்கள் எதையும் சாதிக்கவில்லை
இரண்டு கழகங்களும் உபயோகமற்ற கழுதைகள் தான்
இங்க பார்ரா?எல்லாரும் கழுதைகள்னு சொல்லுது.மேலும்
-
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் தமிழர் உயிரிழப்பு
-
புயலுக்கு முரசு என்ற தமிழ்ப் பெயர் சூட்டியது எப்படி? சுவாரஸ்ய தகவல் இதோ!
-
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கல்; சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
மேற்காசியாவில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்காவின் ரகசியத் தாக்குதல்
-
புயலால் 2வது நாளாக இன்றும் பாதிப்பு; சென்னை-ஆந்திரா செல்லும் 4 விமானங்கள் ரத்து
-
இன்றும் உயர்ந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.560 உயர்வு