சீமை கருவேல மரங்கள் ஏலம் விடும் பணி துரிதம்

கிருஷ்ணராயபுரம்:மாயனுார் நீர்வளத்துறைக்கு உட்பட்ட காவிரி படுகை மற்றும் நீர்வழித்தடங்களில் உள்ள, சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கான, ஏலம் விடும் பணி மாயனூர் கதவணை அருகில் செயல்படும் அலுவலகத்தில் நடந்தது.

நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திக் தலைமை வகித்தார். மாயனுார் நீர்வளத்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட வதியம் காவிரி படுகை மற்றும் வீரகுமாரன்பட்டி பகுதியில் உள்ள நீர்வளித்தடத்தில் வளர்ந்துள்ள, சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்றுவதற்கான ஏலம் விடும் பணி நடந்தது. இதில் வீரகுமாரன்பட்டி அருகேயுள்ள மரங்களை அகற்றுவதற்காக, 3.80 லட்சம் ரூபாய், வதியம் காவிரி படுகை பகுதியில் உள்ள மரங்களை அகற்ற, 1.91 லட்சம் ரூபாய் வரை ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் அதற்கான தொகையை, நீர்வளத்துறை அலுவலகத்தில் கட்டினர். 50க்கும் மேற்பட்டவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement