நவ.,1 முதல் மதுப்பிரியர்களுக்கு குட்நியூஸ்; டாஸ்மாக் நிர்வாகம் கொண்டு வந்த அதிரடி மாற்றம்
சென்னை: டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது மதுப்பிரியர்களின் தொடர் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த உடன், பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, கடைகளுக்கான செலவை அரசே ஏற்பது போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இருப்பினும், பெரும்பாலான கடைகளில் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக, நவம்பர் 1ம் தேதி முதல் சில புதிய நடைமுறைகளை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுவரையில் பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கு மேல் பாட்டிலுக்கு தனியாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது. காலி பாட்டிலை திருப்பி கொடுக்கும் போது, அந்த ரூ.10 திருப்பி கொடுக்கப்பட்டது. தற்போது புதிய சட்டத்தின்படி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி என்ற பெயரில் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.10 விதிக்கப்பட்டுள்ளது. நவ.,1ம் தேதி முதல் பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்குள்ளேயே இந்த ரூ.10 சேர்க்கப்பட்டு விடும். இதனால், பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கே மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படும்.
அதற்கு மேல் கூடுதலாக பணம் வசூலிக்கும் கடை பணியாளர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, எந்தக் கடையில் மது வாங்கியிருந்தாலும், வேறு டாஸ்மாக் கடைகளிலும் பாட்டிலை திருப்பி கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து சரிபார்த்த பிறகே பணம் வழங்கப்படும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தமிழ், ஆங்கிலத்தில், 'மதுபாட்டில்கள் அச்சிட்ட விலைக்கு தான் விற்கப்படும். கூடுதல் தொகை வசூலிக்கப்படாது. காலி பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும்.' என்ற அறிவிப்பு பலகையை அக்.,31க்குள் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
WINE, WHISKY, BRANDY ETC., ARE POISONS.
THEY ARE NOT FRUIT SALADS.
பார் நடத்துவோருக்கு கும்மாங்குத்து கலெக்ஷன். என்ஜோய். சியர்ஸ்
இந்த 10 ரூபாய் திருட்டை தடுக்க தமிழக அரசு திண்டாடுகிறது. பின் எப்படி உளுத்து போன தமிழக அரசை திருத்த முடியும். ?. இப்போ பெரும்பாலான அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக உள்ளார்கள். அரசு அசுர பலத்துடன் செயல் பாட்டானும். இல்லை அரசுக்கு கஷ்டம் தான் ...மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி