ஹாங்காங் சூப்பர் சிக்ஸஸ்; முதல் போட்டியில் இந்திய அணி ஏமாற்றம்
ஹாங்காங்: ஹாங்காங் சூப்பர் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நவ.,1ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 6 ஓவரைக் கொண்ட இந்தப் போட்டியில் ஓர் அணியில் 6 வீரர்கள் மட்டுமே இடம்பெறுவர். க்ருணல் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன், ராகுல் திரிபாதி, ஷஷாங்க் சிங், நிதிஷ் ரானா, ராகுல் தெவாடியா இடம் பிடித்துள்ளனர்.
சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹாங்காங்கின் மோங் காக் மைதனாத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணி எதிர்பார்த்த அளவு ரன் குவிக்கவில்லை.
ஷஷாங்க் சிங் மட்டுமே அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 11 பந்தில் 5 சிக்சர் உள்பட 40 ரன் எடுத்தார். நிதிஷ் ரானா 19 ரன்னும், நடராஜன் 12 ரன்னும் (நாட் அவுட்) ராகுல் திரிபாதி 9 ரன்னும் எடுத்தனர். கேப்டன் க்ருணல் பாண்டியா, தெவாடியா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.
அதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 3.5 ஓவரிலேயே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கவாஜா நபாபே 41 ரன்னும், அப்பாஸ் அப்ரிடி 35 ரன்னும் எடுத்தனர்.
மேலும்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு
-
தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை அமைச்சர் விக்னேஷ் பேட்டி