இண்டி கூட்டணி பேரணியை தடுக்க மத்திய அரசு முயற்சித்ததா? ஆதாரத்தை காட்டுங்கள்; பாஜ கேள்வி
நமது நில்லி நிருபர்
'இண்டி' கூட்டணி சார்பில் நவ. 1ல் நடக்க உள்ள, 'சலோ டில்லி' பேரணியில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது என காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, டில்லியில் நிருபர்களிடம் பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது: 'இண்டி' கூட்டணி பேரணியை தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல் கூறுவது, முற்றிலும் பொய். போராட்டக்காரர்களை யார் தடுத்து நிறுத்தினர்? தவறான தகவலைப் பரப்பி, மக்களைத் திசைத்திருப்பும் செயலில் ஈடுபடுவதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும்.
இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை அவர் முன்வைக்க வேண்டும். ஆதாரத்தை எங்களுக்குக் காட்டுங்கள். இந்த விதமாக நாட்டில் பொய் மற்றும் குழப்பமான சூழலை உருவாக்காதீர்கள். குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக மக்களை ராம்லீலா மைதானத்திற்கு அழைக்கிறார்கள். இதைத்தான் ராகுல், காங்கிரஸ் கட்சி மற்றும் சில எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு
சம்பித் பத்ரா கூறினார்.
எதிர் கட்சிகள் எல்லாம் ஆளும் கட்சியின் குற்றங்குறைகளை விளம்பரப்படுத்தாமல் துதிபாட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் இன்னாட்டில்.மேலும்
-
மழை காலத்திலும் கைவிடாத சூரியசக்தி மின் உற்பத்தி 8,818 மெகாவாட்டாக உச்சம்
-
தமிழகத்தில் 6,000 டன் கேழ்வரகு கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி
-
‘108’ ஆம்புலன்ஸ் 3ம் தேதி முதல் வேலைநிறுத்தம்
-
‘தாய்மாமன்’ திட்டம் பெயரில் பண மோசடி செய்யும் கும்பல்
-
84,707 வணிக வரி வழக்குகள் நிலுவை தீர்வு காண கூடுதலாக 11 மன்றங்கள்
-
தவறை மறைக்க ஆளும்கட்சி மீது பழிபோடும் தி.மு.க., கைத்தறி துறை அமைச்சர் சாடல்