தேஜ கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை: நிர்மலா சீதாராமன்

1

புதுடில்லி: இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம் என்ற பெயரில் சுருக்கமான அறிக்கையை உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டது.அதில்,'' இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை சரசரவென குறைந்தது'' எனக்கூறியிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை:

வறுமையில் இருந்து அதிக மக்கள் வெளியே வருவதில் இந்தியா முன்னேற்றம் அடைந்ததை உலக வங்கி அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

அதில் பல குறிப்பிட்ட விஷயங்களை குறிப்பிட்டுள்ளது.

* 2011 முதல் 2023 வரையில் ஒரு நாளைக்கு 400 ரூபாய்க்கும் குறைவான வருவாயில் வாழ்ந்த மக்களின் விகிதம் 57.1 சதவீதத்தில் இருந்து 16.1 சதவீதமாக குறைந்தது.

* தீவிர வறுமை விகிதமும் 27.1 % ல் இருந்து 2.6% ஆக குறைந்தது.

* 2017 முதல் 2023 வரையில் 13.4 கோடி வேலைவாய்ப்பு அதிகரித்தது. இது உழைக்கும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு.

* வேலைவாய்ப்பில் கிராமப்புற பெண்கள் பெரிதும் பயனடைந்தனர். வீடுகளில் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

* கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் அனைத்தும் நலத்திட்டங்களின் பலன்களை அனுபவித்தன. கிராமப்புற இந்தியாவின் விரைவான முன்னேற்றமானது கிராமப்புறம் - நகர்ப்புறம் இடைவெளியை குறைத்தது.

* 99 சதவீத மக்களுக்கு மின்வசதி கிடைத்தது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நீடித்த கொள்கை, முயற்சி உறுதியான முடிவை தருகின்றன. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பெரிய பொருளாதார வாய்ப்புகளை அளிக்கின்றன. மக்களின் நம்பிக்கையையும், உத்தரவையும் தேஜ கூட்டணி அரசு வென்றதற்கு இதுவே காரணம்.

உற்பத், வேலைவாய்ப்பு, வலுவான வீட்டு வருமானம் மற்றும் பொது சேவைகளை திறம்பட வழங்குவதன் வாயிலாக இந்த முன்னேற்றத்தை கட்டியெழுப்ப நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதனால் மக்களின் விருப்பங்களும் நிறைவேறுகின்றன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement