பஸ்சில் கிடந்த ரூ.30 ஆயிரத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

சென்னை, புழுதிவாக்கம், தியாகி பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 52; சி.ஏ.எம்.எஸ்., என்ற தனியார் நிறுவனத்தில் துணை மேலாளர்.

மடிப்பாக்கம் குமரன் திரையரங்கம் நிறுத்தத்தில் இருந்து, தடம் எண் 14எம் மாநகர பேருந்தில் ஏறி பரங்கிமலை ரயில் நிலையம் நோக்கி சென்றார்.

வானுவம்பேட்டை அருகே சென்றபோது, கீழே கிடந்த பணத்தைப் பார்த்த பிரபாகரன், மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

பின் காவல் நிலையம் சென்று பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் முன்னிலையில் எண்ணியபோது, அதில் 30 ஆயிரம் ரூபாய் இருந்தது.

பிரபாகரனின் நேர்மையை பாராட்டி, மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சுரேந்திரன் அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
Latest Tamil News
ஆட்டோவில் கிடந்த மொபைல் போலீசில் ஒப்படைப்பு

விழுப்புரம் அடுத்த டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி, 50; ஷேர் ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் இன்று பயணம் செய்த நபர் ஒருவர் மொபைல் போனை விட்டுவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து, வீரமணி அந்த மொபைல் போனை விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து, மொபைல் போன் உரிமையாளரான விழுப்புரத்தை சேர்ந்த செந்தில் என்பவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஆட்டோ டிரைவரின் செயலை போலீசார் பாராட்டினர்.

Advertisement