தந்தை மாயம் மகன் புகார்

பண்ருட்டி: தந்தையை காணவில்லை என மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அவுலியா நகரைச் சேர்ந்தவர் அபிபுல்லா,54; தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 28 ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அபிபுல்லா, வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது மகன் முகமதுபாஷீத்,19; கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து அபிபுல்லாவை தேடி வருகின்றனர்.

Advertisement