முதல்வர் கோப்பையில் 15 பதக்கங்கள்
முதல்வர் கோப்பை போட்டிகள்: ல் தொடங்கி 28-ம் தேதி வரை சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி பிரிவில் 308 பேர், கல்லூரி பிரிவில் 304 பேர், அரசு ஊழியர்கள் பிரிவில் 12 பேர் என மொத்தம் 710 பேர் பங்கேற்றனர். மூன்று தங்கம், மூன்று வெள்ளி, ஒன்பது வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் திருப்பூர் 23-வது இடம் பிடித்துள்ளது. இதில் பள்ளிகள் பிரிவில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் எட்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
பள்ளி மாணவியர் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜெய்வாபாய் பள்ளி மாணவி வர்ஷிகா முதலிடம் பெற்று தங்கம் வென்றார். பள்ளி மாணவர் பீச் வாலிபால் போட்டியில் காங்கயம் ரோடு வித்ய விகாஷினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜோதிவாசன், பிரணவ் வர்ஷன் ஆகியோர் முதலிடம் பெற்று தங்கம் வென்றனர். பள்ளி மாணவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பிளாட்டோஸ் பள்ளி மாணவர்கள் பிரனேஷ், அஸ்வின்குமார் ஆகியோர் தங்கம் வென்றனர்.
அரசு ஊழியர் ஆண்கள் கேரம் பிரிவில் சிக்கந்தர் இரண்டாமிடம் பெற்று வெள்ளி வென்றார். கல்லுாரி மாணவர் பளுதுாக்குகுதல் பிரிவில் கிஷோர்குமார், மாணவியர் பிரிவில் ஷிவசங்கரி ஆகியோர் வெள்ளி வென்றனர்.
கல்லுாரி மாணவியர் 400 மீட்டர் ஓட்டத்தில் புனிதா, குத்துச்சண்டையில் மோனிஷா, மாணவர் பிரிவு ஜிம்னாஸ்டிக்கில் அக்ஷயபிரியன், பள்ளிகள் பிரிவு குத்துச்சண்டையில் மித்ரா, தனுஜா, பேட்மின்டனில் கிருத்தியா, வாள் சண்டையில் மவுரீஸ், ஜூடோவில் தனுஸ்ரீ, அரசு ஊழியர் கேரம் பிரிவில் பிரகாஷ்குமார் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
முதலிடம் பெற்றவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு முறையே 75 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வர்ஷிகா, பிரனேஷ், அஸ்வின்குமார், ஜோதிவாசன், பிரணவ் வர்ஷன்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி