கைது நடவடிக்கையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை; அமைச்சர் ரமேஷ்
திருச்சியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது: எப்பொழுதும் நாங்கள் ஒரு விஷயத்தை மிக தெளிவாக சொல்கிறோம். எல்லா தலைவர்கள் மீதும் அன்பும், பற்றும், மரியாதையும் கொண்டவர் முதல்வர் விஜய். பசும்பொன்னுக்கு முதல்வர் விஜய் வரவில்லை என்று கூறி சிலர் அரசியல் செய்ய நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அவர் (இபிஎஸ்) தொடர்ந்து தோல்வியை சந்தித்து கொண்டு இருக்கிறார்.
ஒவ்வொரு தேர்தலாக 10 தோல்வி, 11 தோல்வி என இன்றைக்கு 13வது தோல்வியை தாண்டி போய் கொண்டு இருக்கிறது. அதனால் அவர் நிம்மதி இல்லாமல் இருப்பது எதார்த்தம் தான். அதனை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.
ஊழல் சக்தி, தீய சக்தி
மக்கள் இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மக்கள் இந்த ஆட்சியை பாராட்டி கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் விஜயை பாராட்டி கொண்டு இருக்கிறார்கள். நாம் அதை தான் முக்கியமாக பார்க்க வேண்டியது இருக்கிறது. இதற்கு முன்னால் மக்கள் பணத்தை தொட்டவர்களையும் சரி, மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் மீதும் சரி, இந்த ஆட்சி எப்பொழுதும் அவர்களுக்கு தண்டனையை பெற்று தரும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, வேறு ஏதும் கிடையாது. திமுக ஒரு ஊழல் ஆட்சி; திமுக ஒரு ஊழல் சக்தி. திமுக ஒரு தீய சக்தி என்று தொடர்ந்து சொல்லி கொண்டே வருகிறோம்.
அந்த அளவுக்கு இவர்கள் மக்கள் பணத்தை சுரண்டி இருக்கிறார்கள். மக்களின் வரி பணத்தை எல்லாம் சுரண்டி, ஒரு குடும்பம் வாழ்வதற்கு ஒட்டுமொத்த கட்சியும் வேலை செய்தது என்றால் அது திமுக மட்டும் தான்.
புதிதாக முளைக்கவில்லை
அந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து கொண்டு இருக்கிறோம். வேறு எந்த விதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. தவறு செய்தவர்கள் நிச்சயமாக அதற்கான பலனை அனுபவிப்பார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்னை யாரால் ஏற்பட்டது.கடந்த 50 ஆண்டு காலமாக நாங்கள் தான் ஆலமரம் என்று சொல்லி கொண்டு இருக்கிற திமுக என்ன சட்டம் ஒழுங்கை பாதுகாத்தது. திமுகவின் 50 ஆண்டு கால ஆட்சி எப்படி இருந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னை எல்லாம் 3, 4 மாதங்களில் புதிதாக முளைத்து விடவில்லை. திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு குளறுபடிகளை கடந்த நான்கு மாதங்களாக நாங்கள் சரி செய்து வருகிறோம். மக்களுக்காக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.
வாசகர் கருத்து (7)
Raj - ,இந்தியா
30 அக்,2026 - 19:19 Report Abuse
இவனே முருக்குக்கு டேட் போடறவன் இவனுகிட்ட போய் அரசியல் பத்தி கேக்கறீங்க 0
0
Reply
AMLA ASOKAN - ,இந்தியா
30 அக்,2026 - 16:22 Report Abuse
விஜய் CM ஆனதே DMK அமைச்சர்களை தண்டிப்பது தான் குறிக்கோள் என்றால் இன்றைய அரசின் குளறுபடிகளாள் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது . ஊழல் உலகளவில் நடைபெறும் எல்லா மனிதர்களுக்குமான பண மோகம் . கருப்பு பணம் அணைத்து துறையில் உள்ள அனைவரிடமும் உள்ளது . உங்களிடமும் கோடிக்கணக்கில் உள்ளது . உங்கள் அமைச்சர்களும் திரை மறைவில் ஊழல் பணம் சம்பாதிக்க ஏங்கி கொண்டு காத்திருக்கிறார்கள் . அதை தடுக்க முடியாது . யார் ஆண்டால் எங்களுக்கென்ன என்பது தான் மக்களின் மனநிலை . மக்களுக்குத்தேவை தமிழக வளர்ச்சி , பாதுகாப்பு , அமைதியான வாழ்க்கை . இதுவரை நீங்கள் தந்த மாற்றம் ஏமாற்றமே 0
0
PATTALI - chennai,இந்தியா
30 அக்,2026 - 20:34Report Abuse
ஊழலை ஒழிக்க முடியாது, ஆனால் கட்டுப்படுத்தமுடியும், அதனை முதலில் செய்தால்தான் கடைசியாக நீங்கள் கேட்டிருக்கும் வளர்ச்சி, பாதுகாப்பு, அமைதி உண்மையாகவே மக்களுக்கு கிடைக்கும், ஊழல் எனும் பேராசைதான் அவற்றை தடுக்கும் முக்கியமான ஊற்றுக்கண், அதனைத்தான் முதல்வர் விஜய் செய்ய தொடங்கியிருக்கிறார், அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? கொஞ்சம் பொறுங்கள், போகப்போக உங்களுக்கே புரியும். 0
0
Reply
S. Gopalakrishnan - ,
30 அக்,2026 - 15:53 Report Abuse
இந்த ஆள் ஒரு அரசியல் கன்றுக்குட்டி. ஒரு ஐந்து வருஷம் வாயை மூடிக்கொண்டு இருப்பது இவருக்கு பெருமை சேர்க்கும். 0
0
Reply
krishna - ,
30 அக்,2026 - 15:45 Report Abuse
RAMESH SOLLITAARU .ELLORUM NALLA KETTUKONGA.IVAR HR 0
0
Reply
ஈசன் - ,
30 அக்,2026 - 14:22 Report Abuse
இது என்ன பதில். முந்தைய அரசில் ஊழல், முறைகேடு செய்தவர்கள் சட்டத்தின் கையில் பிடி பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை செல்வார்கள், இல்லை என்றால் விடுவிக்க படுவார்கள். இது தானே பதில் அமைச்சரே. அரசியல் காழ்ப்புணர்ச்சி கைது என்பது இதில் சேராது. 0
0
Reply
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
Advertisement
Advertisement