4வது டி-20 கிரிக்கெட்: நியூசிலாந்து ஆறுதல் வெற்றி
ஆக்லாந்து: இந்தியா - நியூசிலாந்து இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக இஷான் கிஷானும், புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக மயாங்க் யாதவ் சேர்க்கப்பட்டனர்.
முதலில் பேட் செய்த நியூசிலாந்துக்கு மயாங்க் யாதவ் அதிர்ச்சி கொடுத்தார். 3 ரன்னில் செய்பெர்ட் விக்கெட்டை கைப்பற்றினார். அதன்பிறகு, பின் ஆலன் (31), மிட்செல் (24), ஜேக்கப்ஸ் (7) சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலிப்ஸ், பிரேஸ்வெல் ஜோடி அதிரடியாக ஆடியது. இதனால், நியூசிலாந்து ரன் மளமளவென எகிறியது. பிலிப்ஸ் 46 பந்தில் சதம் அடித்தார்.
மறுமுனையில் பிரேஸ்வெல் 25 பந்துக்கு 65 ரன் குவித்தார். பிலிப்ஸ் 49 பந்துக்கு107 எடுத்து அவுட்டானார். இறுதியில் அந்த 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 259 ரன் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் மயாங்க் யாதவ் 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், பிரின்ஷ் யாதவ், நிதிஷ் குமார், அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதன் பிறகு கடின இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய இந்திய அணிக்கு துவக்க சஞ்சு சாம்சன் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை அளித்தார். அடுத்து வந்த இஷான் கிஷனும் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். அபிஷேக் சர்மா 27, ஸ்ரேயாஸ் ஐயர் 22 ஓரளவு ரன் எடுத்தனர். அக்சர் படேல் 7 ரன்னில் அவுட்டானார்.
நிதிஷ்குமார் ரெட்டி 21, திலக் வர்மா 35, நமின் திபர் 28 ரன் எடுத்தனர். அர்ஷ்திப் சிங் ரன் எடுக்காமல் அவுட்டானார்.இறுதியில் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கடைசி வரை பிரின்ஸ் யாதவ் 18, மயங்க் யாதவ் 3 ரன்னுடன் களத்தில் இருந்தனர்நியூசிலாந்து அணி 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸில் ரெக்கார்டு
ஸ்ரேயாஷ் ஐயர் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற 25 போட்டியில் 19ல் டாஸை வென்றுள்ளார். இதன்மூலம், அதிகமுறை டாஸ் வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக, வெஸ்ட் இண்டீஸின் டேரன் சமியும், பாகிஸ்தானின் சல்மான் அலி அகாவும் 17 முறை டாஸ் வென்றிருந்தனர்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி