உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து; விமானி, பயணிகள் 5 பேர் பலி

3

நமது நிருபர்


உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. ​​விமானி உட்பட ஆறு பேர் பயணம் செய்துள்ளனர்.

தொடர் மழை, அடர்த்தியான மேகமூட்டம் ஆகியவற்றால் மீட்பு பணியில் சிக்கல் நீடித்தது.

இரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. விபத்தில் ஐந்து பயணிகளும், விமானியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். 6 பேரின் சடலமும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

ஐந்து பயணிகளும் பெங்களூருவைச் சேர்ந்த அருண் சலுங்கே, நாகராஜா, பிரதாபா, சுதீர் மற்றும் சங்கர்கவுடா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விமானி கேப்டன் ஹிமான்ஷு சபர்வாள் என்பது தெரியவந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement