பனியால் தாமதமாக வந்த ரயில்
சிவகங்கை: சிவகங்கையில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் காலை 8:30 மணி வரை கடும் பனியாக இருந்ததால் வாகன ஓட்டிகள் தவிப்பிற்குள்ளாகினர். சென்னை - ராமேஸ்வரம் ரயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது. எல்-நினோ தாக்கத்தால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில் அக்., 15 முதல் 26 வரை மட்டுமே லேசான, மிக கனமழை பெய்தது. அதற்கு பின் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வழக்கத்திற்கு மாறாக பனி ஏற்பட்டு, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மதுரை - தொண்டி, தஞ்சாவூர் - பரமக்குடி தேசிய நெடுஞ்சாலைகளில் பனி மூட்டத்தால் வாகனங்கள் முகப்பு விளக்குடன் மெதுவாக சென்றன. கல்லல் - சிவகங்கை இடையே அதிகளவில் பனி மூட்டம் காணப்பட்டதால், நேற்று காலை 6:00 மணிக்கு சிவகங்கை வர வேண்டிய சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7:15 மணிக்கு தான் சிவகங்கை வந்தது. வழக்கம் போல் 100 கி.மீ., வேகத்தில் செல்லும் ரயில், 60 கி.மீ., வேகத்தில் மெதுவாக சென்றது. கலெக்டர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் சிரமம் அடைந்தனர். நேற்று காலை 8:30 மணிக்கு பின் வழக்கமான சூழல் நிலவியது. /
மேலும்
-
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்: ஆண்டிபட்டி வாரச்சந்தை ரூ.3.50 கோடியில் கட்டிய கடைகள் வீணாகிறது
-
போடி ரோட்டில் ஆபத்தான பேனர்கள் ஆக்கிரமிப்பு
-
விண்ணில் சீறிப்பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி - எப்18: அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய மைல்கல்!
-
வாக்காளர்ள பட்டியல் சிறப்பு திருத்தம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
-
மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் மீது வழக்கு