விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் இரு வழி சாலை திறக்கப்படுமா: வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
சிதம்பரம்: விழுப்புரம் நாகை பைபாஸ் சாலையில், சிதம்பரம் அருகே சாலை உள்வாங்கிய பகுதியில், ஒரு பக்க சாலைகள் முடிக்கப்படாமல் ஜவ்வாக இழுத்து கொண்டிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அடுத்துள்ள கொள்ளிடம் பாலம் அருகே கடந்த ஏப்ரல் மாதம், சுமார் 200 மீட்டர் துாரத்திற்கு சாலை உள்வாங்கியது. இதனால், அந்த சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கொள்ளிடம் வழியாக சீர்காழி வரை போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
அதனை தொடர்ந்து சாலைகள் பாதித்த இடத்தில், இரு பக்கமும் முற்றிலும் சாலை அகற்றப்பட்டு, சாலை போடும் பணி மந்தமாக நடந்து வந்தது. இதனால் பழைய சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன் பணிகள் வேகம் எடுத்தது. தொடர்ந்து சாலைகள் போடும் பணி இரவு பகலாக நடந்தது. ஒரு வழியாக கடந்த மாதம் 26 ம் தேதி, ஒரு பக்க சாலை மட்டும் திறக்கப்பட்டு மீண்டும் போக்குவரத்து துவங்கப்பட்டது. ஆனால் ஒரு மாதங்கள் ஆகியும் மறுபுற சாலை இன்னும் திறக்கப்படவில்லை. பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, வாகன போக்குவரத்து அதிகரிக்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு பக்க சாலைகளில் இரு வழி போக்குவரத்து என்பது பெரும் விபத்தை ஏற்படுத்திவிடும்.
எனவே, போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து, பெரும் விபத்தை தவிர்க்க, உடனடியாக இரு பக்க சாலையும், திறந்து போக்குவரத்து துவங்கப்பட வேண்டும் என நகாய் அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கு; மேலும் ஒருவர் கைது
-
முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா தலைமையிலான குழு ஜெர்மனி பயணம்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி