150 ஏக்கரில் காட்டு பன்றி சேத தடுப்பு திட்டம்
தேனி: மாவட்டத்தில் 150 ஏக்கரில் காட்டு பன்றி சேத தடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவினர்.
அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில் காட்டு பன்றிகளை விரட்ட கூடிய ஒரு வகை திரவம் தயாரித்துள்ளனர். அந்த திரவத்தில் இருந்து வெளிவருக்கூடிய ஒரு வகை வாசம் பன்றிகளை விரட்டுகிறது. இந்த திரவத்தை வரப்புகளில் குறிப்பிட்ட இடைவெளியில் கட்ட வேண்டும். தேனி சின்னமனுார் வட்டாரங்களுக்கு தலா 15 ஏக்கர், பெரியகுளம், ஆண்டிபட்டி, கடமலைகுண்டு மயிலாடும்பாறை, கம்பம், உத்தமபாளையம், போடி ஆகிய வட்டாரங்களில் தலா 20 ஏக்கரில் பயன்படுத்த இலக்கு வைத்துள்ளனர். விவசாயிகள் ரூ. 50 செலுத்தி உழவன் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். திரவம், அதனை வரப்புகளில் கட்டுவதற்கு பயன்படும் பாட்டில்கள், கயிறுகள் வழங்கப்படும். தேவை உள்ள விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
100 ஏக்கரில் முதியோர், ஆதரவற்றோருக்கான இல்லம்; அடிக்கல் நாட்டினார் நீடா அம்பானி
-
எங்களுடைய கொள்கை முழுமையான மதுவிலக்கு தான்; அமைச்சர் விக்னேஷ் உறுதி
-
மக்களே நோட் பண்ணிக்கோங்க; அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்க ஆன்லைனில் முன்பதிவு
-
அரசு பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு மறுபரிசீலனை அவசியம்: பாலகுருசாமி
-
மின் இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் உடனடியாக தீர்வு காண வாரியம் உத்தரவு
-
தீபாவளிக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை அமைச்சர் விக்னேஷ் பேட்டி