விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

வேப்பூர்: நல்லூர் ஒன்றிய வேளாண்துறை சார்பில் நெல் சாகுபடி மண்டல பகுப்பாய்வு பண்ணை பள்ளி பயிற்சி முகாம் இலங்கியனூரில் நடந்தது.

முகாமிற்கு, உதவி இயக்குனர் கீதா தலைமை தாங்கினார். விருத்தாசலம், வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் ராஜ பாஸ்கரன், வேளாண் உதவி அலுவலர் தினேஷ் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன், குமரேசன், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதில், நெல் சாகுபடி மண்டல பகுப்பாய்வு பண்ணை பள்ளி தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement