ஊருணியை துார்வார நீதிமன்றம் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் மக்கள் அதிருப்தி
சிவகாசி: சிவகாசியில் மங்கம்மாள் ஊருணியை துார்வார நீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி பழனியாண்டவர் காலனியில் 1 ஏக்கர் பரப்பளவில் மங்கம்மாள் ஊருணி உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பாட்டில் இருந்த ஊருணி தனி நபர்கள் சிறிது சிறிது ஆக்கிரமித்து விட்டனர். இந்நிலையில் 2023 ல் தனிநபர் ஒருவர் ஊருணியை மீட்டு துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதி நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் 2023 நவ. ல் ஊருணியை துார்வார மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. ஆனாலும் மாவட்ட,, மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. பின்னர் அதே நபர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊருணியை துார்வார எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2024 அக். ல் ஊருணியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 8.25 லட்சத்தில் துார் வார மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முள்வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஊருணியில் உள்ள முட்புதர்களை மற்றும் அகற்றிவிட்டு, முன்புறம் கேட் அமைக்கப்பட்டு, வேலி போடப்பட்டுள்ளது. மேலும் இவ்விடத்திற்கு தனிநபர்கள் பிரச்னை ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை மட்டும் வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை துார்வாருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும்
-
விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ‘ஜி.எஸ்.எல்.வி., எப் – 18’ ராக்கெட்
-
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
மனைவி அடித்துக்கொலை செய்து எரிப்பு ? சிதம்பரம் அருகே பரபரப்பு
-
பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத வணிக வளாகம்: ஆண்டிபட்டி வாரச்சந்தை ரூ.3.50 கோடியில் கட்டிய கடைகள் வீணாகிறது
-
போடி ரோட்டில் ஆபத்தான பேனர்கள் ஆக்கிரமிப்பு
-
குரங்கணி–சாம்பலாறு தடத்தில் டிரக்கிங் செல்ல ஆர்வமில்லை: முன்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்